மேலும் 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு:ஜெனரல் சவேந்திர சில்வா

நாட்டு சனத் தொகையில் 9 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் முதல் சாதாரண மக்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவை மார்ச் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply