வடக்கின் தீவுகளை சீன கம்பெனிக்கு வழங்குவது முரணானது:சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகள், சீன கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணான விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வட மாகாண முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளையும் சீன கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக வழங்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். கிழக்கு முனையம் தொடர்பில், இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால், மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டமை, வட மாகாணப் பாதுகாப்புக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

அரசியலமைப்பின், 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி, எமது பகுதிக் காணிகளை, ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால் கூட, அது மாகாண சபையின் ஊடாகச் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த விக்னேஸ்வரன் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், அதற்குப் பதிலாக, ஆளுநரின் ஊடாக, அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply