உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் ஆப்ரிக்க பெண்

கடந்த 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி வருகிறது. 164 உறுப்பினர்களை கொண்ட உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன.

நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியங் -ஹீ ஆகியோர் இதற்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியில் அமரும் முதல் ஆப்பிரிக்கர் மற்றும் முதல் பெண் என்னும் சிறப்பை நிகோஸி ஒகோன்ஜோ இவீலா பெற்றுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாகிய பொருளாதாரம் மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தெரிவித்துள்ளார். தற்போது 66 வயதாகும் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா, மொத்தம் 164 நாடுகளுடைய பிரதிநிதிகளால் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply