ஆபத்தை நோக்கி இலங்கை, 18 நாட்களில் 100 கொரோனா மரணங்கள் பதவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 18 நாட்களுக்குள் 100 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளனர். ஜனவரி 29ம் திகதியே நாட்டில் 300வது கொரோனா மரணம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 18 நாட்கள் கடந்த போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 5 தொடக்கம் 8 கொரோனா மரணங்கள் தறபோது பதிவாகி வருகின்றன. 200வது கொரோனா மரணத்தின் பின் 300வது கொரோனா மரணம் பதிவாக சுமார் 30 நாட்கள் சென்றது. ஆனால் 300வது கொரோனா மரணத்தில் இருந்து 400வது கொரோனா மரணத்தை பதிவு செய்ய வெறும் 18 நாட்களே சென்றுள்ளது.
அதன்படி கொரோனா பாதிப்பு மரண வேகம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply