அரசியல்வாதிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க காரணம் என்ன? இதோ விளக்கம்

மக்களுடன் நேரடி தொடர்பட்டு செயற்பட்டு வருவதன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானித்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
திருட்டுத் தனமாக ஆளும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கவில்லை எனவும் கொரோனா வைரஸ் புதிய பிரவாகம் பரவுவதை தடுக்கும் முன்னேற்பாடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு சேவை ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்த வரிசையில் அடுத்து இருப்பது அரசியல்வாதிகள் எனவும் மக்களை அடிக்கடி சந்திப்பவர்கள் இவர்கள் என்பதால் கொரோனா தொற்று ஏற்படுவதை அல்லது பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம் என சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply