இம்ரான் கானை சந்திக்கும் வாய்ப்பை இறுதி நேரத்தில் இழந்த ஹக்கீம், ரிசாத்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கு ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன் ஆகியோருக்கு இறுதி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹக்கீம் மற்றும் ரிசாத் இம்ரான் கானை சந்திக்க வாய்ப்பு பெற்றனர்.
எனினும் தற்போது வந்துள்ள செய்தியின் படி இம்ரான் கானை சந்திக்க ஹக்கீம் மற்றும் ரிசாத் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைவர்களாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதீன் ஆகியோர் திகழ்கின்றனர்.
இந்நிலையில் இம்ரான் கானின் விஜயம் தொடக்கம் அவரது நிகழ்ச்சி நிரல் அனைத்தும் சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply