அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு பரிந்துரை உயர் நீதிமன்றை அவமதிப்பதாக முறைப்பாடு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக உயர் நீதிமன்றுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக என விசாரணை செய்யுமாறு கோரி சட்டத்தரணிகள் குழுவொன்று பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

உயர் நீதிமன்ற எழுதுவிளைஞர் ஊடாக இந்த எழுத்து மூல முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.

சேனக்க பெரேரா, அச்சலா செனவிரட்ன, நாமல் ராஜபக்ஷ மற்றும் தம்பையா ஜயரட்னராஜா ஆகிய சட்டத்தரணிகள் இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

2015 ஜனவரி 8ம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய 2157/44 என்ற வர்த்தமானி ஊடாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அல்லது வழக்குகள் குறித்து அழுத்தம் பிரயோகிக்க முடியாது எனவும் ஆனால் ஆணைக்குழு பரிந்துரை மூலம் உயர் நீதிமன்றின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சுயாதீனம் , மக்கள் நம்பிக்கை போன்றன கேலி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக துமிந்த சில்வாவிற்கு உயர் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை நீதிமன்றுக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு மக்கள் நம்பிக்கைக்கும் இழுக்கு ஏற்படுத்தும் செயல் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுளள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply