இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று

இலங்கை விமானப்படை தனது 70 ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் கொண்டாடுகின்றது. அதேநேரம் விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு மார்ச் 03 முதல் 05 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாகப் பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 23 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக விமானப்படை அறிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply