குவைட் நாட்டில் சிக்கியிருந்த 118 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைட் நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்று நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் சிக்கியிருந்த 118 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் நேற்று (08) இரவு குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply