முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை-சம்பூர் இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திகுளம் குளத்தில் இரண்டு சிறுவர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச்சிறுவனுடன் சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தகவலைக் கூறியதையடுத்து, அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை, தன்னுடைய மகனை முதலை இழுத்துச் செல்வதை அவதானித்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply