இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை : ஆஸ்திரேலியா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை விதித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply