கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த 3 பேரின் விபரங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (26) உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய உயிரிழந்த 3 பேரின் விபரங்கள் பின்வருமாறு,

  1. கல்பாத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. கந்தான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 92 வயதுடைய ஆண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. அவிசாவளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர், நெவில் பர்னாந்து மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மோசமான கொவிட் நியூமோனியாவுடன் ஏற்பட்ட இதயநோய் மற்றும் சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply