மகாராஷ்டிரத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து : 4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 03.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஒரு மீட்பு வாகனம் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தீ விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply