அலுவலக ரெயில்கள் சிலவற்றை இன்று முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானம்
இன்று முதல் அலுவலக ரெயில்கள் சிலவற்றை அதிகரிப்பதற்கு ரெயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தூர இடங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தூர ரெயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பயணிகளின் கோரிக்கைக்கமைவாக வடக்கு ரெயில் சேவை சில இடம்பெறுவதாகவும் ரெயில்வெ திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள சகல மார்க்கங்களிலும் தனியார் பஸ் போக்குவரத்தை இன்று முதல் 25 வீதமாக குறைப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply