பல எதிர்ப்பின் பிறகும் தொடர்ந்து இலங்கையர்களுக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசியை போடும் அரசு
இலங்கையில் மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.யக்கல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கே நேற்று இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சீனா அரசாங்கத்தால் ஆறு இலட்சம் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக நட்பு ரீதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு பகுதி நாட்டில் வசிக்கும் சீனர்களுக்குச் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கிய நிலையில், இலங்கையில் குறித்த தடுப்பூசித் திட்டம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 293 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி வழங்கப்பட்டது.
பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக களுத்துறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரசாத் லியனகே தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply