கொரோனா தடுப்பு பணி முதல் : அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி குவிகிறது

கொரோனா தடுப்பு பணிக்கு முதல்-அமைச்சர் நிவாரண பணிக்கு அனைத்து தரப்பினரும் நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகிறார்கள்.

ஹட்சன் குழும சேர்மன் ஆர்.ஜி.சந்திரமோகன், மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது தமிழ்நாடு வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு உடன் இருந்தார்.

சென்னை பப்ளிக் பள்ளியின் தலைவர் என்.தேவராஜன் மற்றும் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். எஸ்.பிரின்ஸ் ஹைடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ரூ.25 லட்சம், கே.ஆர்.ஜி. டெக்னாலஜிஸ் முதன்மை செயல் அலுவலர் ராஜன்பாபு ராஜேந்திரன், இணை நிறுவனர் ஹேமலதா ஆகியோர் ரூ.25 லட்சம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் வழங்கினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து கொரோனா நிவாரணப்பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உடன் இருந்தார். தொடர்ந்து எடிட்டர் மோகன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply