இன்று திங்கட்கிழமை வெளியே செல்வோருக்கும் அவசர அறிவித்தல்

கொரானா மிகத்தீவிரமாக பரவிவரும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் கடுமையான சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது..

இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, இன்றைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.
பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 17ஆம் திகதி என்பதனால், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
ஏனைய செயற்பாடுகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும்.

இதனை மீறி நடப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply