நுவரெலியாவில் சினிசிட்டா விளையாட்டரங்கம் 500 பேர் இருக்கும் கொரோனா நிலையமாக மாற்றம்

நுவரெலியாவில் சினிசிட்டா விளையாட்டரங்கம் 500 பேர் இருக்கும் கொரோனா நிலையமாக மாற்றம்.இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றில் 3 ஆவது இடத்தை பற்றிக்கொண்ட நுவரெலியாவில் 500 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க சினிசிட்டா விளையாட்டரங்கம் நேற்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த வசந்தகாலத்தை நுவரெலியாவில் நடத்தியதே இதற்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை இந்த வசந்த காலத்தை நுவரெலியா மேயர் நடத்தாமல் இருந்திருந்தால் நுவரெலியா எப்போதும் பாதிக்கப்பட்டிருக்காது எனவும், அடிப்படை வசதியே இல்லாமல் இருக்கும் தோட்டபுறங்களை சார்ந்த இந்த மாவட்டத்தில் தொற்று அதிகரிக்குமானால் பல உயிர் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிவரும் அதற்கு நுவரெலியா மேயரே பொருப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply