இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை, மரணங்கள் குறித்தும் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் எதிர்வரும் வருடம் ஜனவரி வரை சுமார் 18,000 பேர் கொரோனாவினால் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் வௌியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வரிக்கை சுகாதார அமைச்சரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருந்து மீள யோசனைகள் பலவற்றை குறித்த நிபுணர்கள் குழு முன்வைத்துள்ளது. அதில் பிரதானமானது பயணத்தடை வலுப்படுத்தல், மாகாண தடைக்கு பதிலாக மாவட்ட பயணத்தடை விதித்தல், சிறய காலத்திற்கேனும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தல், அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்கு தடை செய்தல், மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்தல், சுகாதார அதிகாரிகளை பாதுகாத்தல், தொடர்பாடல் ஊடாக மக்களுக்கு தௌிவூட்டல், தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறித்த உண்மைத் தகவல்களை வௌியிடல், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கி முடித்தல் போன்ற பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழு வழங்கியுள்ளது.

வைத்திய நிபுணர்கள் 30 பேர் இணைந்து இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளமை விசேட அம்சமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply