ரிஷாத் பதியுதீன் விடுதலை வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திட்டம் ஆரம்பம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து பெறும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் நேற்று (13) ஜும்ஆ தொழுகையின் பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் கையெழுத்து பெறப்பட்டுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply