அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு கோடி ரூபாவரை தண்டம் : அமைச்சர் பந்துல குணவர்தன

அரசாங்கத்தின் நிர்ணய விலை 100 ரூபாவிற்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளிடம் அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.எக்காரணம் கொண்டும் 100 ரூபாய்க்கு அதிகம் அரிசி விற்பனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என அவர் கூறினார்.

100 ரூபாய்க்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான வரைபு சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தவுடன் அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெற்று பாராளுமன்றத்தில் சட்டமாக்க உள்ளதாக அவர் கூறினார்.

அந்த சட்டத்தின் மூலம் 100 ரூபாய்க்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் நபருக்கு 2500 ரூபா முதலிலும் இரண்டாவது தடவை ஒரு லட்சம் ரூபாவும் மூன்றாவது தடவை இரண்டு லட்சம் ரூபாவும் இப்படியாக பத்து லட்சம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அரிசி உரிமையாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தண்டம் அறவிடும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த சட்டத்தில் பின்னர் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்காது இருந்தால் அதனை எவ்வாறு வெளியில் எடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் பந்துல குணவர்த்தன கூறினார்.

அதனால் அரிசி அதிக விலைக்கு விற்போரிடம் அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply