இலங்கை பிரஜையான ISIS பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் நியூஸிலாந்தில் சுட்டுக்கொலை

நியூஸிலாந்தின் ஓக்டன்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள சுப்பர் மார்கட் ஒன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.

உடனே செயற்பட்ட அங்கிருந்த பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் இடம்பெற்ற விசார ணையில் ​குறித்த சந்தேகநபர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் 2011ம் ​ஆண்டு நியூஸிலாந்திற்கு சென்றுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்து பிரதமர் ஜெகிர்ன்டா ஆர்டென் சர்வதேச ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply