புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் கொழும்பில் கைது
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கொட்டாஞ்சேனைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல் ஒன்றைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனையில் உள்ள வீடு ஒன்றைச் சுற்றிவளைத்து தேடுதலை நடத்திய பயங்கரவாத புலனாய்வுத்துறையினர், பாக்கியராஜ் பிரதீப் என்ற குறிப்பிட்ட இளைஞரைக் கைது செய்ததுடன், அங்கிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply