இலங்கையில் பள்ளிகளில் தொலைபேசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் ஒரு மாணவி தனது தொலைபேசியை பள்ளியில் பயன்படுத்தியதற்காக கண்டிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அவ்வகையான தொலைபேசிகளை கொண்டு வருவதை தடை செய்துள்ளது.

பள்ளி மாணவர்கள் தங்களது வகுப்பறைக்குள் தொலைபேசியை எடுத்து வராமல் இருக்கும் நடவடிக்கையினை ஆசிரியர்கள் உறுதி செய்வார்கள் என்று கல்வித்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பள்ளி நேரத்தின் போது ஒரு பையனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதற்காக, கடந்த வாரம் 14 வயதான ஒரு மாணவி கண்டிக்கப்பட்டதை அடுத்து அந்த மாணவி தன்னைத் தானே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கையின் இருபது மில்லியன் மக்கள் தொகையில், பாதி அளவுக்கு மேலானவர்கள் மொபைல் தொலைபேசியை உபயோகப்படுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply