ரஷியா இதுவரை 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது : உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள். இந்நிலையில், உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின. கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply