ஐரோப்பிய நாடுகளில் வீசும் வெப்ப அலை : கடற்கரைகளில் குவியும் மக்கள்
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது. வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன.
காட்டுத்தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தை அதிகரித்து வெப்ப அலைகள் வீச வழிவகுத்துள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply