வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா பயணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை தொடர்பில் கனடா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தயார் செய்துள்ள இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 7ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply