ஸ்பெயினில் பரபரப்பு உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்தது
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒரு கடித வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஊழியர் காயம் அடைந்தார். இதை அந்த நாட்டின் உள்துறை மற்றும் ராணுவ அமைச்சகங்கள் உறுதி செய்தன.
இந்த நிலையில், நேற்று மேட்ரிட் நகருக்கு வெளியே உள்ள ஜாரகோசா நகரில் விமானப்படை தளத்தில் ஒரு கடித வெடிகுண்டு நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற்சாலையில்தான் கையெறி குண்டு லாஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.
உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடித வெடிகுண்டும், விமானப்படை தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடித வெடிகுண்டும் ஒரே நபரால் அனுப்பப்பட்டது என தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply