பெருந்தோட்டத் துறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனவே பெருந்தோட்டத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, தற்போது தீர்க்கப்பட்டு வரும் மகாவலி அதிகார சபை மற்றும் அதன் காணிகள் தொடர்பான பிரதான சவால்களில் ஒன்று என சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் காலாவதியாகவிருக்கும் குத்தகைகள் பிராந்திய பெருந்தோட்டங்கள் எதிர்கொள்ளும் பிரதான சவாலாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விவசாய நவீனமயமாக்கலை அரசாங்கம் முன்னெடுப்பதாக இருந்தால் புதிய குத்தகைகளை வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், அனைத்து நிறுவனங்களும் சிறப்பாகச் செயற்படாததால், புதிய குத்தகைகளை வழங்குவதற்கான அடிப்படையைக் கண்டறியுமாறு பெருந்தோட்ட சீர்திருத்தக் குழுவின் (PRC) உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது அறிவுறுத்தினார்.
நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் புதிய குத்தகைகளை வழங்குவதற்கான அடிப்படையை நிர்ணயிப்பதற்கும் 2018 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
காணி வழங்கப்பட்டவுடன் அரசாங்கத்தின் அனுமதியின்றி நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது யோசனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் துறையில் உள்ள வீடுகள், பெருந்தோட்டத் துறையின் கீழ் வரும் மூன்று பிரதான பயிர்கள் (தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை) எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேயிலை தோட்ட லைன் அறைகள் மற்றும் வீட்டுவசதி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply