நெடுந்தீவு ஐவர் படுகொலை சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.
100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியான நேற்று மாலை உயிரிழந்தார்.
குறித்த கொலைச் சம்பவத்தில் தப்பித்த பிரதான சந்தேக நபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தாக்குதலின் போது காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply