இலங்கைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 1.5 மில், சுற்றுலாவிகள்

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்திச்சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்ததாவது.

நவம்பர் மாத இறுதிவரை மொத்தம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதன் மூலம் டிசெம்பர் மாத இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 2023ஆம் ஆண்டின் நவம்பர் இறுதிவரை 1,75 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply