நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்று (04) இரவு டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி காலநிலை நீதி மன்றத்திற்கான முன்மொழிவை முன்வைத்ததுடன், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளில் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுதுடன், இலங்கையில் நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இங்கு ஜனாதிபதி விளக்கினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply