டெலிகிராம் நிறுவனர் மீது குற்றச்சாட்டு: பிரான்சிலிருந்து வெளியேறத் தடை

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைவருமான பாவெல் துரோவ் மீது பிரான்ஸ் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் டெலிகிராம் செயலியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பிலானவை.

இதனால் பாவெல் துரோவ், பிரான்சிலிருந்து வெளியேற நேற்று வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியில் தீவிரவாத, சட்டவிரோதப் பதிவுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள 39 வயது துரோவ் தவறியதாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ர‌ஷ்யாவில் பிறந்த அவர், இம்மாதம் 24ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள லெபூர்கெ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணையை நடத்தினர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். என்றாலும், அவர் பிரான்ஸை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, துரேவுக்காக வாதிடும் பிரெஞ்சு வழக்கறிஞரான டேவிட்-ஒலிவியே கமின்ஸ்கி, சமூக ஊடகத்துக்குத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பார் என்று சொல்வது முட்டாள்தனமானது என்று சாடியுள்ளார்.

“டெலிகிராம், ஐரோப்பாவில் நடப்பில் உள்ள மின்னிலக்கப் பதிவுகள் தொடர்பிலான விதிமுறைகள் அனைத்துக்கும் இணங்கச் செயல்படுகிறது. அது, மற்ற சமூக ஊடகத் தளங்கள் பின்பற்றும் விதிமுறைகளைப் போலவே தங்களுக்கானவையும் இருப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தி வருகிறது,” என்று டேவிட்-ஒலிவியே கமின்ஸ்கி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply