மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு தந்தையும் மகளும் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது ஆறு வயது மகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இறந்தவரின் மகனும் மகளும் காயமடைந்தனர்.இதனையடுத்து, மகள் தங்காலை வைத்தியசாலையிலும், மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply