நான்கு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply