கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜைகள் மீட்பு

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ரஷ்ய பிரஜைகளான 37 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதுடைய பெண்ணொருவரே மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு படையினர் விரைந்து செயற்பட்டு குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply