பாதுகாப்புப் படைகளிலிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவு : பாதுகாப்புச் செயலாளர்

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும்.மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.உத்தியோகபூர்வமற்ற முறையில் இராணுவத்திலிருந்து விலகிய அல்லது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்களே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply