கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கைக்கு அருகில் வெள்ளிக்கிழமை (07) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply