கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை : அண்ணன் தப்பியோட்டம்

இரத்தினபுரி மாவட்டம் எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுபத்கல பிரதேசத்தில் அண்ணனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை செய்யப்பட்டுள்ளதாக எலபாத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

எலபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய தம்பியே கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபரான அண்ணன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான அண்ணன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply