உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி தொடங்கியது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply