மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மே தின பேரணி
மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வளச்சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் மே தின பேரணி இன்று (10.04) வியாழக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மே தின பேரணியானது மாலை 2 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மன்னார் வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியைச் சென்றடைந்தது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், அனுர அரசே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதிலைத் தா.அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு,விவசாய காணிகளை விகாரைக்குப் பறிக்காதே, காற்றாடி செயல் திட்டத்திற்கு அனுமதியளிக்காதே, கச்ச தீவை தாரை வார்க்காதே,இந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்து ,காணி அபகரிப்பையும், அத்து மீறிய குடியேற்றத்தையும் நிறுத்து, எனப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இதன் போது மன்னார் பஜார் பகுதியில் மே தின கூட்டம் இடம்பெற்றது.
விவசாயிகள் மீனவர்கள் மலையக மக்கள் மற்றும் பழங்குடியினர் என அனைவரையும் ஒன்றிணைத்து ந,டாத்தப்பட்ட குறித்த கூட்டத்தில் வடமாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொது செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன்,வலவ விவசாயிகள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சுதேஷ் கமகே மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதி என்.எம்.ஆலம், கிழக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றிய பிரதிநிதி கே.ருசிக்க , சர்வதேச கிராமிய விவசாய இயக்கத்தின் தெற்காசிய வலய பிரதிநிதி விமுக்திக சில்வா ரதுகள பழங்குடி மக்கள் தலைவர் சுதார வன்னி லத்துகே ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
குறித்த நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply