குஜராத்தில் 242 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானம் : பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதே எனது எண்ணங்கள் உள்ளன என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் இன்று(12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தின் போது விமானத்தில், 169 இந்தியர்களும், 53 பேர் பிரித்தானிய நாட்டவர்களும், 1 கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கள் நாட்டவர்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளானதை அடுத்து பிரிட்டன் அரசாங்கம் 020 7008 5000 உதவி இலக்கத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply