நாமல் ராஜபக்க்ஷ எம்.பியின் கூற்றால் சபையில் சர்ச்சை
நிலையியற் கட்டளை 98 Fன் கீழ் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என, தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விவாதம் தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ எம்.பி முன்வைத்த கூற்றால் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே, நாமல் ராஜபக்க்ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 98 Fன் கீழ், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது. தேசபந்து தென்னக்கோன் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 09 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு பாராளுமன்ற விவாதத்தால் பாதிக்கப்படாது என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும்.அது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பின்னர் விவாதத்தைத் தொடங்குங்கள் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தொடர்புடைய விதிகளை ஆராய்ந்த பின்னரே , பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த நாள் ஒதுக்கப்பட்டது. இதனால் இன்று (நேற்று)பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்
எனினும் அதனை ஏற்க மறுத்த நாமல் ராஜபக்க்ஷ எம்.பி.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதன் சட்டபூர்வத்தன்மை குறித்து தொடர்ந்தும் கேள்வி எழுப்பி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன்போது ஆளும் தரப்பு எம்பிக்கள் சிலரும் நாமலுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply