அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இன்று வருகை

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று (06) புதன்கிழமை வருகை தரும், சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பாரென்றும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களிலும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஈடுபடுவாரென நம்பப்படுகிறது.பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் உள்ள அவுஸ்திரேலிய ஆதரவுடன் இயங்கும் திட்டங்களையும் இவர் இதன்போது பார்வையிடவுள்ளார்.

இவரின் விஜயம் இலங்கை – அவுஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply