இலங்கை இளைஞர்கள் இருவர் தமிழகத்தில் கைது

இலங்கை இளைஞர்கள் இரண்டு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைதாகியுள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த பைபர் படகு பழுதடைந்தமையால், தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும், வேதாரண்யம் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டவர்களா? அல்லது கடத்தலுடன் தொடர்புடையவர்களா? என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply