சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்கவும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க 354 பவுண் தங்கம்,77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக பெறுமதியான பல்வேறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இரண்டு வருடங்களுக்குள் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களாகும்.கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுண் தங்கம்,64 வாகனங்கள்,06 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை 204 பவுண் தங்கம்,13 வாகனங்கள்,67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், இன்னும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply