வாழைச்சேனை பகுதியில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வாழைச்சேனை – கஹனேரி பகுதியில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) காலை பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் வாழச்சேனை, கஹனேரி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்றபோதும், மனைவி அவரை கோடரியால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply