மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து : 07 பேர் உயிரிழப்பு
வட அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ நாட்டில் திங்கட்கிழமை (15) சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.அபல்கோ நகரில் இருந்து புறப்பட்டு டொலுகா விமான நிலையம் அருகே பறந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சான் மெடிகோ அடென்கோ பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி தீப்பற்றி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply