சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் ஒருவர் கைது

மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று புதன்கிழமை (17) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன்போது 189,000 சிகரெட்டுகள், 33 லீற்றர் 600 மில்லிலீற்றர் பூச்சிக்கொல்லிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் புத்தளம் – பாலாவி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply