கல்வி கற்குமாறு தாய் வலியுறுத்தியதால் மாணவி விபரீத முடிவு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் தாயார் கல்வி கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயது 15 மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவியை அவரது தாயார் தினமும் பாடங்களைப் படிக்குமாறு கூறி வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி வீட்டில் குப்பைகளை எரிப்பது போல நடித்து, தன் மீது பெற்றோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், அவரை மீட்டு உடனடியாக மந்துவில் வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply